மாவட்ட செய்திகள்

கோணம் அரசு கலை கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் + "||" + Application to the Government Arts College at Angamaly

கோணம் அரசு கலை கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்

கோணம் அரசு கலை கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது.
நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் மேற்படிப்பை தொடர கல்லூரிகளை நாடி செல்கிறார்கள்.

இதையொட்டி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று காலை தொடங்கியது. இங்கு இளங்கலையில் ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு, வணிக நிர்வாகவியல் மற்றும் இளம் அறிவியலில் கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.


500-க்கும் மேற்பட்டோர்...

இந்த பாட பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை பி.சி., எம்.பி.சி., ஓ.சி. பிரிவினர் ரூ.50 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அதுவே எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பின் தங்களது சாதி சான்றிதழ் நகலை கொடுத்து ரூ.2 மட்டும் செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பம் வாங்க கல்லூரிக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். நேற்று மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இந்த விண்ணப்பம் வினியோகம் 10 நாட்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. பின்னர் 4 மற்றும் 6, 7 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இதே போல் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது.