தமிழ் இளைஞர்கள் நல கூட்டமைப்பின் முப்பெரும் விழா மாட்டுங்காவில் நடந்தது


தமிழ் இளைஞர்கள் நல கூட்டமைப்பின் முப்பெரும் விழா மாட்டுங்காவில் நடந்தது
x
தினத்தந்தி 23 April 2019 4:46 AM IST (Updated: 23 April 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் இளைஞர்கள் நல கூட்டமைப்பின் முப்பெரும் விழா மாட்டுங்காவில் நடந்தது.

மும்பை,

மராட்டிய மாநில தமிழ் இளைஞர்கள் நல கூட்டமைப்பின் 2-வது ஆண்டு விழா, தமிழ் புத்தாண்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நேற்று முன்தினம் இரவு மாட்டுங்காவில் உள்ள பயோனியர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு அமைப்பின் தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். செயலாளர் அழகுசுந்தரம் வரவேற்று பேசினார். செம்பூர் தமிழர் பாசறை தலைவர் ஆ.பி. சுரேஷ், மும்பை பவுல், ராஜா இளங்கோ மற்றும் முருகன் அபிமன்யு உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

இதில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், சரவணா சக்தி மற்றும் இயக்குனர் சுசிகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், இங்கு இருக்கும் போது, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, என்றார்.

மேலும் அவர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். நடிகர் சரவணா சக்தி, இயக்குனர் சுசிகணேசன் ஆகியோரும் பேசினார்கள்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ், சரவணா சக்தி மற்றும் இயக்குனர் சுசிகணேசன் ஆகியோருக்கு மாலை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி மலையரசன் கவுரவித்தார். விழாவில் 2 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை ஆர்.கே.சுரேஷ் மற்றும் சுசிகணேசன் வழங்கினார்கள். நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு வில்லேபார்லே அஜித் ரசிகர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம், மராட்டிய மாநில தமிழ்ச்சங்க மும்பை பா.ஜனதா செயலாளர் ஆல்வின் தாஸ், பட்டன்தேவர், கராத்தே முருகன், மணிகண்டன், முருகேஷ் குருசாமி, மகாராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மராட்டிய மாநில தமிழ் இளைஞர்கள் நல கூட்டமைப்பினர் செய்து இருந்தனர்.

Next Story