மாவட்ட செய்திகள்

மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது + "||" + Because the money does not pay to drink alcohol Cut the scythe to the woman; Husband arrested

மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது

மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்து பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்குளி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 32). இவருடைய மனைவி மல்லிகா(27). இவர்கள் ஊத்துக்குளி அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வீரக்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வீரக்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அது போல் சம்பவத்தன்று மது குடிப்பதற்காக வீரக்குமார், தனது மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வீரக்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மல்லிகாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை, கழுத்து பகுதியில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

உடனே அங்கிருந்து வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். பின்னர் படுகாயம் அடைந்த மல்லிகாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த வீரக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது
வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
2. ரஞ்சன்குடிகோட்டை அருகே, மானை வேட்டையாடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
ரஞ்சன்குடிகோட்டை அருகே மானை வேட்டையாடிய சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
3. போலி சொத்து பத்திரம் மூலம் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி; முன்னாள் மேலாளர் கைது
மும்பை அந்தேரி வெர்சோவா பகுதியை சேர்ந்தவர் மார்தா டிசோசா. இவரது வீட்டிற்கு தேனா வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது. அந்த நோட்டீசில் தாங்கள் வாங்கிய ரூ.50 லட்சம் கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று விசாரித்தார்.
4. தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை: தஞ்சையில், முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது
தஞ்சை புறவழிச்சாலை பகுதியில் வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டி வந்த முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.