பர்கூரில், இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்


பர்கூரில், இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 April 2019 3:45 AM IST (Updated: 24 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் பள்ளி இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையம் சார்பில் பள்ளி இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு மற்றும் நேரடி சேர்க்கை கள ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. காரகுப்பம் மற்றும் இருளர் காலனி பகுதியில் நடந்த கணக்கெடுக்கும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் சூசைநாதன், நாராயணா, பர்கூர் வட்டார மேற்பார்வையாளர் குமார், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, பழனிசாமி, பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வில் 4 இடைநின்ற மாணவர்கள் காரகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேரடியாக சேர்க்கப்பட்டனர். 5 வயது பூர்த்தி அடைந்த 3 மாணவர்கள் இருளர் காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேர்க்கப்பட்டனர்.

இந்த கணக்கெடுக்கும் பணியில், அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கணக்காளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், பெற்றோர்கள் இடைநின்றலை தடுக்க தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். மேலும் பர்கூர் ஒன்றியத்தில் இந்த கணக்கெடுக்கும் பணி வருகிற மே 15-ந் தேதி வரை நடைபெறும் என்று கூறினார்.

Next Story