அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியீடு
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உள்ளாட்சி தேர்தலுக் கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேற்று வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 2 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள், 2 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள், ஆயிரத்து 9 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் அடங்கிய மொத்தம் உள்ள 1,013 ஊரக உள்ளாட்சி வாக்குச்சாவடிகளுக்கும், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 23 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள், 23 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள், 16 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் கொண்ட 62 நகராட்சி வாக்குச்சாவடிகளும் மற்றும் பேரூராட்சியில் 30 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும் கொண்ட மொத்தம் உள்ள 92 நகர்புற உள்ளாட்சி வாக்குச்சாவடிகளுக்கான வரைவு பட்டியல்கள் இன்று (அதாவது நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு பட்டியல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்று (அதாவது நேற்று) முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ரகு, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் சாதாரண உள்ளாட்சி தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கீழ்கண்டவாறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகளும், 4 பேரூராட்சிகளில் 60 வாக்குச்சாவடிகளும், 4 ஊராட்சி ஒன்றியங்களில் 638 வாக்குச்சாவடிகளும் ஆகக் கூடுதல் 748 வாக்குச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக இம்மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் ஆட்சேபனை ஏதும் இருந்தால் எழுத்துபூர்வமாக அடுத்த மாதம் மே 2-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.
வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பாக பெறப்படும் ஆட்சேபனைகள், கருத்துக்களை பரிசீலித்து தேவைப்படின், உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் அடுத்த மாதம் மே 4-ந் தேதி அன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வெளியிடப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story