கன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
கன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரம் முட்புதரில் வாலிபரின் பிணம் கிடப்பதை கண்டனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிணமாக கிடந்தவரை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? அல்லது நண்பர்களுடன் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். அவர் கருப்பு நிற சாட்சும், ஊதா நிற சட்டையும் அணிந்திருந்தார். தலை மற்றும் உடலில் பல பகுதிகளில் ரத்த காயம் இருந்தது. அருகில் மது பாட்டில்கள் கிடந்தன. மேலும், இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் எனத்தெரிகிறது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிணமாக கிடந்தவரை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? அல்லது நண்பர்களுடன் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story