நோயாளி இன்றி ஆம்புலன்சில் அலாரம் எழுப்பி சென்ற டிரைவர் கைது 6 போலி ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல்
நோயாளி இன்றி அலாரம் எழுப்பிக்கொண்டு ஆம்புலன்சை ஓட்டி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 போலி ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மும்பை மாகிம் கடல்வழி பாலம் அருகே சம்பவத்தன்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் அலாரம் எழுப்பிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. உடனடியாக போலீசார் அந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். ஆம்புலன்ஸ் அவர்களை கடந்த சென்றபோது, நோயாளிகள் யாரும் உள்ளே இல்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுபற்றி உடனடியாக போலீசார் அடுத்த சிக்னல் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த சிக்னலில் போலீசார் அலாரம் எழுப்பி கொண்டு வந்த ஆம்புலன்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் உள்ளே பார்த்த போது அதில் நோயாளிகள் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை கேட்டனர். அவர் கொடுத்த உரிமத்தை வாங்கி சோதனை நடத்தியதில், அது போலியானது என்பது தெரியவந்தது. எனவே போலீசார் ஆம்புலன்சை ஓட்டி வந்த பாந்திராவை சேர்ந்த மனோஜ் சிவ்பிரகாசை கைது செய்தனர்.
மேலும் போலீசார் அவரிடம் இருந்து 6 போலி ஓட்டுநர் உரிமம் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story