ஏ.பி.எஸ். வசதியுடன் பஜாஜ் அவெஞ்சர், பல்சர் என்.எஸ்.160
இந்நிறுவனம் 180 சி.சி. கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது.
குரூயிஸ் மோட்டார் சைக்கிளில் பஜாஜ் மாடலின் அவெஞ்சர் ரக மோட்டார் சைக்கிள் மிகச் சிறப்பான மாடலாகும். ஏற்கனவே இந்நிறுவனம் 180 சி.சி. கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக 160 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்கிறது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி உள்ளது.
குரூயிஸ் மாடலில் 220 சி.சி. மாடலைத் தொடர்ந்து 180 சி.சி. மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 சி.சி. மாடலுக்குப் பதிலாக தற்போது 160 சி.சி. கொண்ட அவெஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இது 15.5 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 180 சி.சி. மாடலுக்கும் இந்த மாடலுக்கும் பெருமளவு வித்தியாசம் கிடையாது. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர் பின்புறம் கொண்டது. இதன் விலை ரூ.88 ஆயிரம் வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் ஏ.பி.எஸ். வசதி இருப்பதால் கூடுதல் விலை இருக்கும். குரூயிஸ் ரக மாடலில் கட்டுபடியாகும் விலையில் கிடைக்கும் பஜாஜ் அவெஞ்சருக்கென அபிமானிகள் பலர் உள்ளனர்.
பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 :
எந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பாளரும் இனிமேல் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதி இல்லாத வாகனங்களைத் தயாரிக்க முடியாது. இதனால் அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் தங்களது வாகனங்கள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதியை கூடுதல் சிறப்பம்சமாக சேர்த்துள்ளனர். அந்த வகையில் இளைஞர்களின் விருப்பமான தேர்வாக உள்ள பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடலில் என்.எஸ்.160 மோட்டார் சைக்கிளில் தற்போது இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பஜாஜ் நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதியை புகுத்தி வருகிறது. 160.3 சி.சி. திறன் கொண்ட பல்சர் என்.எஸ்.160 மாடல் மோட்டார் சைக்கிள் தற்போது ஏ.பி.எஸ். வசதி கொண்டதாக வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 15.5 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. ஏ.பி.எஸ். யூனிட் சேர்க்கப்பட்டது தவிர மோட்டார் சைக்கிள் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை ரூ.85,939 ஆகும்.
Related Tags :
Next Story