வருகிறது போக்ஸ்வேகன் போலோ பிளஸ்


வருகிறது போக்ஸ்வேகன் போலோ பிளஸ்
x
தினத்தந்தி 24 April 2019 10:33 AM IST (Updated: 24 April 2019 10:33 AM IST)
t-max-icont-min-icon

இந்த நிறுவனத்தின் 6-வது தலைமுறை காராகும்

போக்ஸ்வேகன் தயாரிப்புகளில் மிகவும் பிரபலம் போலோ. இதில் தற்போது சீன சந்தைக்கென போலோ பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் இடம்பெறும் இந்த கார் சீனாவின் எஸ்.ஐ.ஏ.சி. போக்ஸ்வேகன் ஆலையில் தயாரானது. போலோ பிளஸ் மாடலானது இந்த நிறுவனத்தின் 6-வது தலைமுறை காராகும். முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டது.

இது 4,053 மி.மீ நீளம், அகலம் 1,740 மி.மீ, உயரம் 1,449 மி.மீ. கொண்டது. இதன் சக்கரம் 2,564 மி.மீ. உடையது. ஏற்கனவே விற்பனையாகும் காரை விட இது நீளமானது.

இது இரட்டை வண்ணத்தில் 16 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங் களைக் கொண்டு ள்ளது. இரட்டை எக்ஸாஸ்ட் பைப் கொண்டது. தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங்கில் அனைத்து கட்டுப்பாடு வசதிகள், ரியர் கேமரா, இ.எஸ்.பி., ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி கொண்டது.

இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் உடையது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர்களைக் கொண்டது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.


Next Story