உலகின் நீளமான பேட்டரி பஸ்


உலகின் நீளமான பேட்டரி பஸ்
x
தினத்தந்தி 24 April 2019 10:58 AM IST (Updated: 24 April 2019 10:58 AM IST)
t-max-icont-min-icon

ஒரே சமயத்தில் 250 பேர் பயணிக்கலாம்.

சீனாவைச் சேர்ந்த பி.ஒய்.டி. நிறுவனம் உலகிலேயே மிகவும் நீளமான பேட்டரி பஸ்ஸை உருவாக்கிஉள்ளது. 88 அடிநீளம் (27.5 மீட்டர்) கொண்ட இந்த பஸ் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. இதில் ஒரே சமயத்தில் 250 பேர் பயணிக்கலாம்.

இது முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. இந்த பஸ்ஸில் 2 சக்கரங்கள் சுழற்சி மற்றும் 4 சக்கர சுழற்சி வசதிகள் உள்ளன. இதை ஏ.சி. மற்றும் டி.சி. ஆகிய முறையில் சார்ஜ் செய்யலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் வரை செல்லக் கூடியது.

இந்த பஸ் ஓராண்டு இயக்கப்பட்டால் இதன் மூலம் 193 டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும். இது 8,900 மரங்கள் நடுவதற்கு சமமானதாகும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story