ராணிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி


ராணிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 April 2019 3:15 AM IST (Updated: 24 April 2019 5:34 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க பாரத ஸ்டேட் வங்கி மூலம் கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கமலேசன் வரவேற்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, வாலாஜா பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஆபித்அகமது, துணை மேலாளர் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயர்கல்வி படிக்க மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் ஆணையை வழங்கி பேசினர்.

இதில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை காரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாலாஜா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்–2 தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மொத்தம் 13 மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கல்விக்கடன் வழங்க ஆணை வழங்கப்பட்டது.

இதில் தலைமை ஆசிரியர்கள் பாலையாதாசன், பரிமளா, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேரன் நன்றி கூறினார்.


Next Story