கலசபாக்கம் அருகே தம்பதிக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தை திடீர் சாவு; சிசு கொலை நடந்ததா? பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு


கலசபாக்கம் அருகே தம்பதிக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தை திடீர் சாவு; சிசு கொலை நடந்ததா? பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 April 2019 11:15 PM GMT (Updated: 24 April 2019 6:19 PM GMT)

கலசபாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தை திடீரென இறந்தது. பெண் குழந்தையாக பிறந்ததால் அது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

கலசபாக்கம் ஒன்றியம், கீழ்பாலூர் கிராமம் நடுத் தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற செல்வம். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள னர். 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளனர். இந்த நிலை யில் விமலா மீண்டும் கர்ப்ப மானார். இதையடுத்து அவர் பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு வண்ணாமலை அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17-ந் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் விமலாவுக்கு பெண் குழந்தை பிறந்துள் ளது.

பெண் குழந்தை பிறந்ததால் கணவன் -மனைவி இருவரும் பிறந்த குழந்தையை மருத்துவ மனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் விமலாவின் தாயார் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம், வெள்ளைக் குட்டை என்ற கிராமத்திற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

அந்த பெண் குழந்தை திடீரென இறந்து விட்டது. இதுகுறித்து திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது பெண் சிசுக்கொலை யாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

இதையடுத்து குழந்தையின் தந்தை செல்வத்தை திரு வண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்திலும், தாயை கிருஷ்ண கிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத் திலும் வைத்து தனித்தனியே விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அதில் குழந்தை பிறந்த அன்று இரவே இறந்துவிட்டதாகவும், குழந் தையை வீட்டிற்கு பின்புறம் அவர்கள் எரித்து சாம்பலை குட்டையில் கரைத்து விட்டதாகவும் விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையின் தந்தை, தாய் மற்றும் குழந்தை யின் தாய்வழி தாத்தா, பாட்டி ஆகியோர் மீது சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத் தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்து வருகிறது. போலீசார் மருத்துவ மனை ஆவணங்கள், பெற் றோரின் வாக்குமூலம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் தந்தை மீதான வழக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

Next Story