போளூர் ரெயில்வே மேம்பால பணி: சேறும், சகதியுமாக கிடக்கும் தற்காலிக மாற்றுப்பாதை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


போளூர் ரெயில்வே மேம்பால பணி: சேறும், சகதியுமாக கிடக்கும் தற்காலிக மாற்றுப்பாதை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

போளூர் ரெயில்வே மேம்பால பணி காரண மாக அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதை சேறும், சகதியுமாக கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர்,

போளூர் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பால பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ரெயில்வே கேட் அடைக்கப் பட்டதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் காளியம்மன் கோவில் ஜெயின் நகர், ஏரிக்கால்வாய் வழியாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையில் செல்கின்றனர். அதே சமயத்தில் ஒரு சிலர் தற்போதும் ரெயில்வேகேட் அடியில் நுழைந்து பாதுகாப்பு இல்லாமல் செல்லும் நிலையும் தொடருகிறது.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஏரிக்கால்வாய் வழியாகவும் தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப் பட்டது.

அந்த பாதை மண்பாதை என்பதால் கடந்த 22-ந் தேதி இரவு போளூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக இப்பாதை முழுவதும் நீரால் சூழப்பட்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அப்பாதை வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எழுந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேம்பாலப்பணி தொடங்கி யதில் இருந்து மாற்றுப்பாதை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருவ தாகவும், பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இப்பாதையை செப் பனிட வேண்டும். கோடை மழை தொடரும் என்பதால் இப்பாதையை சீரமைப்பது அவசியம். சாலையை சீரமைக் கும் பட்சத்தில்தான் வாகன ஓட்டிகளின் சிரமத்தினை குறைக்க முடியும். மேம்பால பணிகள் முடிய பல மாதங்கள் ஆகும் என்பதால் மாற்றுப் பாதையில் தார்சாலை அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story