அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மனுதாக்கல்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக கரூர் காந்திநகரில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தார்.
பின்னர் தாலுகா அலுவலகத்திற்குள் 5 பேருடன் சென்று செந்தில்பாலாஜி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலால் உதவி ஆணையருமான மீனாட்சி பெற்றுக் கொண்டார். அவருக்கு மாற்று வேட்பாளராக அசோக்குமார் மனுதாக்கல் செய்தார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப்புலெட்சுமிஜெகதீசன், மா.சின்னசாமி, செல்வகணபதி, தி.மு.க. சொத்து பாதுகாப்பு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று கு.தனசேகரன், மா.முரளி, பெ.பிரபு, கா.வெங்கேடஷ், எஸ்.பூபதி, ஆர்.மணிவாசகம், ப.கமலகண்ணன், கி.மவுனகுரு ஆகிய 8 சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்தனர். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வரை 3 சுயேச்சைகள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
நேற்று மனுதாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, அவரது மாற்று வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேருடன் சேர்த்து இதுவரை அந்த தொகுதியில் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Tags :
Next Story