நாமக்கல்லில் பலத்தகாற்றுடன் மழை: மரம் விழுந்ததில் 4 மின்கம்பங்கள் சேதம் மின்வினியோகம் பாதிப்பு
நாமக்கல்லில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்து 4 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த மழைக்கு நாமக்கல் எஸ்.கே.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு பின்னால் உள்ள கரட்டில் நின்ற மரம் ஒன்று முறிந்து மின்சார வயரில் விழுந்தது.
இதில் 4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன. இதேபோல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விஜய் ஸ்ரீதர் என்பவரின் மொபட் ஒன்றும் சேதம் அடைந்தது. இதையடுத்து அப்பகுதியினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று காலையில் சேதம் அடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பிற்பகலுக்கு மேல் மின்வினியோகம் சீரானது. இருப்பினும் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Related Tags :
Next Story