சிதம்பரம்(தனி) நாடாளுமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறையை தேர்தல் அதிகாரி ஆய்வு


சிதம்பரம்(தனி) நாடாளுமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறையை தேர்தல் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 8:29 PM GMT)

சிதம்பரம் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்துள்ளனர்.

அரியலூர்,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்துள்ளனர். அந்த தபால் ஓட்டுகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த அறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) பாலாஜி, தபால் ஓட்டு பொறுப்பு அலுவலர் அருட்செல்வி, தேர்தல் தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story