கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் முளைப்பாரி எடுப்பு விழா


கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் முளைப்பாரி எடுப்பு விழா
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 8:41 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் புகழ்பெற்ற காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் புகழ்பெற்ற காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முளைப்பாரி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி கறம்பக்குடி, தட்டாவூரணி, தென்னகர், குளக்காரன்தெரு, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் நவ தானியங்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். தாரை தப்பட்டைகள் முழங்க கோவில் குளத்தில் முளைப்பாரிகளை விட்டனர். அங்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதைதொடர்ந்து காசாம்பூ நீலமேனி கருப்பர், வண்ணாத்தாள், கொம்புகாரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story