திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் பயணி கைது


திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் பயணி கைது
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பயணியை கைது செய்தனர்.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் இருமல் மருந்து போன்ற வடிவில் இருந்த போதைப்பொருளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை அந்த பயணி மலேசியாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம், அதிகாரிகள் போதைப்பொருளை ஒப்படைத்தனர்.

பயணி கைது

மேலும் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடத்த இருந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story