பாணாவரம் அருகே விவசாயியை குத்தி கொலை செய்த மகன் கைது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொன்றதாக வாக்குமூலம்


பாணாவரம் அருகே விவசாயியை குத்தி கொலை செய்த மகன் கைது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே விவசாயியை குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாக அவர் கூறி உள்ளார்.

பனப்பாக்கம், 

பாணாவரத்தை அடுத்த பள்ளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 85). விவசாயி. இவரது மனைவி ரத்தினம் (75). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதேபகுதியில் வசித்து வருகின்றனர். இதில் 2-வது மகன் ஏழுமலை (39)

நேற்றுமுன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பஞ்சாட்சரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஏழுமலை, தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது தந்தை பஞ்சாட்சரத்தை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பஞ்சாட்சரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட பஞ்சாட்சரத்தின் மனைவி ரத்தினம் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தனது கணவர் பஞ்சாட்சரத்துக்கும், மகன் ஏழுமலையின் மனைவி கலைச்செல்விக்கும் தவறான உறவு இருப்பதாக கருதி ஏழுமலை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஏழுமலை போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி கலைச்செல்விக்கும், தந்தை பஞ்சாட்சரத்துக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். தமிழ்புத்தாண்டு அன்று எனது மனைவியை உடலுறவுக்கு அழைத்தேன் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து, நான் கூப்பிட்டால் வரமாட்டாய், எனது தந்தை அழைத்தால் மட்டும் செல்வாயா? என்று கேட்டு வாக்குவாதம் செய்தேன்.

இதனால் எனது மனைவி காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த நான் மதுபோதையில் எனது தந்தையிடம் இதுபற்றி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story