அவினாசி அருகே, அலுவலக பூட்டை உடைத்து கணினி-பொருட்கள் திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை


அவினாசி அருகே, அலுவலக பூட்டை உடைத்து கணினி-பொருட்கள் திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 25 April 2019 3:23 AM IST (Updated: 25 April 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த கணினி மற்றும் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம், 

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரமணி (வயது 72). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அவினாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (47) என்பவர் பராமரித்து வருகிறார்.

இதற்காக தோட்டத்திலேயே ஒரு அலுவலக அறையை ரமணி அமைத்து கொடுத்திருந்தார். அதில் கணினி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வராஜ் வழக்கம் போல அலுவலகத்தை பூட்டி விட்டு தூங்க சென்று விட்டார்.

மறுநாள் காலை அலுவலகத்தை திறக்க சென்ற போது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கணினி மற்றும் அதை சார்ந்த பொருட்கள், கண்காணிப்பு கேமரா பதிவு கருவி மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து செல்வராஜ் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவினாசி அருகே பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story