முல்லுண்டில் ஆட்டோ டிரைவரை கொன்ற வாலிபர் கைது
முல்லுண்டில் தாயுடன் உல்லாசமாக இருந்த ஆட்டோ டிரைவரை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை முல்லுண்டு காலனியை சேர்ந்தவர் ரவி காட்டே(வயது25). எலக்ட்ரீசியன். இவரது பெற்றோர் உணவு விடுதி நடத்தி வருகின்றனர். இந்த உணவு விடுதியில் ஆட்டோ டிரைவர் தேவேந்திர சிங் என்பவர் சாப்பிட வருவது வழக்கம். அப்போது அவர் ரவி காட்டேயின் தாயுடன் நெருங்கி பழகினார். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரண்டு பேரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு ரவி காட்டே வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது, தேவேந்திர சிங் தனது தாயுடன் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதில், கடும் ஆத்திரமடைந்த ரவி காட்டே, தேவேந்திர சிங்கை பிடித்து அவரது மர்மஉறுப்பில் பலமாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த முல்லுண்டு போலீசார் அங்கு சென்று தேவேந்திர சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ரவி காட்டேவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story