பன்றி் காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி


பன்றி் காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 25 April 2019 4:10 AM IST (Updated: 25 April 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் உயிரிழந்து உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. புனே, நாசிக், நாக்பூர் ஆகிய இடங்களில் அதிகளவில் இந்த நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் தற்போது வரை பன்றிக்காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 120 பேர் இறந்து இருப்பதாகவும், 1,346 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 பெண்கள் பலி

இதில், மும்பையில் ஒரு மூதாட்டி உள்பட 2 பெண்கள் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் மஜ்காவை சேர்ந்த 65 வயது மூதாட்டி 8 நாட்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அக்ரிபாடாவை சேர்ந்த 30 வயது பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 நாளில் பலியானார்.

இருவரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானதை மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதுவரை மும்பையில் 135 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story