தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்: போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நர்சிங் யாதவ் இடைநீக்கம்


தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்: போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நர்சிங் யாதவ் இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 April 2019 4:16 AM IST (Updated: 25 April 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் உதவி போலீஸ் கமிஷனர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை,

2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ். இவர் மும்பை போலீசில் ஆயுதப்படை உதவி கமிஷனராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை வடமேற்கு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் நிருபம் பிரசாரம் செய்தபோது, அவருடன் பிரசார மேடையில் இருந்து உள்ளார்.

விதிமுறைகளை மீறி போலீஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி வேட்பாளருடன் பிரசார மேடையில் தோன்றியது சர்ச்சையை உண்டாக்கியது.

பணி இடைநீக்கம்

இது தொடர்பாக நர்சிங் யாதவ் மீது அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய நர்சிங் யாதவ் அதிரடியாக உதவி போலீஸ் கமிஷனர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை மராட்டிய அரசு எடுத்துள்ளது.

Next Story