அரும்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடிகள்
அரும்பாக்கத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை ரவுடிகள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனத்தில் சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள் தொடர்ந்து அப்பகுதியில் தகராறு செய்து வந்ததால் பயத்தில் இருந்த அப்பகுதி மக்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் பொதுமக்களை மிரட்டியவர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியை காட்டி தகராறு செய்த ரவுடிகளான ஜெகன், அம்ரோஸ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த பகுதியில் அடிக்கடி இரவு நேரங்களில் குடிபோதையில் அடிதடி சம்பவங்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளது. இருப்பினும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதே இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி வருகிறார்கள்.
அரும்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அதன்பிறகு இளம் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story