திருவாரூரில் ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


திருவாரூரில் ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஆபத்தான பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர்-தஞ்சை சாலையில் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் பாலம் அமைந்துள்ளது. பழமையான குறுகிய பாலத்தினை மோட்டார் சைக்கிளில் வருபவர்கள், நடந்து செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பாலத்தின் கைசுவர்கள் இடிந்து, பாலத்தின் தூண்கள் வலுவிழந்து காணப்படுகிறது. மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.

தற்போது திருவாரூர் புதிய பஸ் நிலையம் தஞ்சை சாலையில் விளமல் கல்பாலம் அருகில் உள்ளது. இதனால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பஸ் நிலையம் செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மடப்புரம் தட்சிணாமூர்த்தி மடத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களும் குறுகிய பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாலம் இடிந்ததால் மடப்புரம், நகர் பகுதி செல்பவர்கள் பழைய பஸ் நிலையம், விளமல் கல்பாலம் வழியாக வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story