மாவட்ட செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்: சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி + "||" + Misery in the Tiruthurippottam: The motorcycle clash in the wall; Young man killed

திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்: சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்: சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருத்துறைப்பூண்டியில் சுவரில் மோதி மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பாரதி(வயது 20). இவர் டிப்ளமோ படித்து விட்டு 10 நாட்களில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராகி வந்தார்.


இந்த நிலையில் நேற்று இவர் திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பவுண்டடி தெரு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பாரதி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள், அங்கு உள்ள ஒரு வீட்டின் சுவரில் மோதியது.

சம்பவ இடத்தில் பலி

இதில் தலையில் படுகாயம் அடைந்த பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் பலி; 11 பேர் படுகாயம் பட்டாசு ஆலை வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்
சாத்தூர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. மோட்டார் சைக்கிள் விபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி பலி
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
3. நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
4. அமெரிக்காவில் பரிதாபம்: மலை ஏறிய பெண் தவறி விழுந்து பலி
அமெரிக்காவில் மலை ஏறிய பெண் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
5. ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
வாழவச்சனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை