கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்


கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 8:04 PM GMT)

கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் கோட்டத்தில் அனைத்து வட்டாரத்தில் மக்காச்சோளம் உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலங்களில் படைப்புழுக்களின் தாக்குதல் தென்படுகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட வயல்களில் மாடுகள் மேய்ந்தது போன்று இலைகள் சேதமடைந்திருக்கும். இலைகளே இல்லாமல் தண்டுகள் மட்டும் இருக்கும்.

தற்போது பெய்துள்ள மழையை கொண்டு கோடை உழவு செய்யும்போது மண்ணில் உறக்க நிலையில் இருக்கும் படைப்புழுக்களின் கூண்டு புழுக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் உழவு காரணமாக மண்ணின் நீர்்பிடிக்கும் தன்மையும் அதிகரிக்கப்படுகிறது. வரப்பு பயிராக நேப்பியர் புழுக்களை கட்டுப்படுத்தலாம். வயலில் காலம் தாழ்த்தி விதைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். வேலிமசால் பயிரினை ஊடு பயிராக சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம்.

ஆண்டு முழுவதும் பூக்கும் பயிர்களான பீன்ஸ், தட்டைப்பயிறு, செண்டுமல்லி போன்ற பயிர்களை ஊடு பயிராகவோ சாகுபடி செய்து கட்டுப்படுத் தலாம்.

ஏக்கருக்கு ரூ.500 மானியம்

கொத்து, கொத்தாக இருக்கும் புழுக்களை ஆரம்ப நிலைகளில் கைகளால் சேகரித்து அழிக்கலாம். இவைகள் படைப்புழுக்களின் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்கும். முட்டை ஒட்டுண்ணியை கொண்டு முட்டைகளைஅழிக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தி தாக்குதல் அளவை குறைக்கலாம்.

விளக்குப்பொறி மூலம் தாய் அந்துப்பூச்சியை அழிக்கலாம். கோடை உழவு மேற்கொள்ளும் மானாவாரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 அரசு மானியமாக வழங்குகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story