7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கல்லூரி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவன் முருகன் (வயது 35). இவர் ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் கிளனராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தந்தை அசோக்குமார் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பிள்ளை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முருகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story