‘தேர்தலில் ஒருமுறை போட்டியிடுங்கள்’ உத்தவ் தாக்கரேக்கு சரத்பவார் சவால்


‘தேர்தலில் ஒருமுறை போட்டியிடுங்கள்’ உத்தவ் தாக்கரேக்கு சரத்பவார் சவால்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 27 April 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஒருமுறை தேர்தலில் போட்டியிடுங்கள் என உத்தவ் தாக்கரேக்கு சரத்பவார் சவால் விடுத்துள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சிரூர், மன்சார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், தான் தேர்தலில் போட்டியிடாதது குறித்து விமர்சித்து பேசிய உத்தவ் தாக்கரேக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியதாவது:-

நான் போட்டி நடக்கும் களத்தைவிட்டு வெளியேறி விட்டதாக உத்தவ் தாக்கரே கூறுகிறார். நான் 14 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 80 வயதை நெருங்கிவிட்டதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தினேன்.

ஒருமுறை போட்டியிடுங்கள்

நீங்கள் (உத்தவ்தாக்கரே) ஒருமுறையாவது களத்திற்கு வந்து (தேர்தலில்) போட்டியிடுங்கள். என்னை மறந்துவிடுங்கள், எனது கட்சியின் சிறு மல்யுத்த வீரன் (தொண்டன்) கூட உங்களை தோற்கடித்துவிடுவான்.

கட்சிக்காக எதையும் செய்யாமல் பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனாவை உத்தவ் தாக்கரே கைப்பற்றி கொண்டார்.

இவ்வாறு சரத்பவார் பேசினார்.

Next Story