புதுச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை


புதுச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
x
தினத்தந்தி 28 April 2019 4:45 AM IST (Updated: 28 April 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

இலங்கை குண்டு வெடிப்பினை தொடர்ந்து இந்தியா முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. போலீசாரும், கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் பெங்களூருவில் போனில் பேசிய மர்ம மனிதன் ஒருவன் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தான். இதைத்தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புதுச்சேரி ரெயில் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடமைகளும் சோதிக்கப்பட்டன. போலீசாரின் இந்த திடீர் சோதனையினால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் போலீசாரும் ரெயில்வே ஊழியர்களும் உண்மை நிலவரத்தை கூறி புரிய வைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த சோதனை நடந்தது. சோதனையை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story