168-வது பிறந்தநாள்: சர் பிட்டி தியாகராயர் உருவப்படத்துக்கு மரியாதை


168-வது பிறந்தநாள்: சர் பிட்டி தியாகராயர் உருவப்படத்துக்கு மரியாதை
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

168-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள சர் பிட்டி தியாகராயர் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை,

சர் பிட்டி தியாகராயர் 168-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் உள்பட அரசு அதிகாரிகள் சர் பிட்டி தியாகராயர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர்கள் த.சரவணன், தா.மனோகரன், அ.உமாபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டவர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Next Story