குடிபோதையில் தகராறு தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது


குடிபோதையில் தகராறு தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 28 April 2019 4:15 AM IST (Updated: 28 April 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் சேகர்(வயது 48). இவர், அதே பகுதியில் உள்ள சோப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.கடந்த 23-ந்தேதி இரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சேகர், தனது மகன் நரேஷ்குமாரிடம்(28) பணம் கேட்டு தகராறு செய்தார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் தந்தை-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த கம்பை எடுத்து மகனை அடிக்க சென்றார். உடனே நரேஷ்குமார், அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சேகரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய பூந்தமல்லி போலீசார், இது தொடர்பாக நரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story