‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் தொடங்கியது


‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் தொடங்கியது
x
தினத்தந்தி 28 April 2019 5:00 AM IST (Updated: 28 April 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

கண்காட்சி-விற்பனையை ‘சத்யா’ நிறுவனத்தின் தலைவர் ஜான்சனின் மகன் ஜாக்சன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதன்பின்னர், ‘கேரியர்’ நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்டான்லி, ‘டைகின்’ கிளை மேலாளர் அசோக், அபி இம்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், டர்ன் கீ ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

முன்னணி நிறுவனங்கள்

கண்காட்சியில் ஹிட்டாசி, டைகின், கேரியர், டி.சி.எல்., சாம்சங், எல்.ஜி., வோல்டாஸ், ஹையர், ஒனிடா, கோத்ரேஜ், சோனி, பிரீத்தி உள்பட முன்னணி நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

சுமார் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னிச்சர் வகைகள், செல்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இதில் எல்.இ.டி. டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கூலர், பேன், பர்னிச்சர்கள் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏ.சி. மாடல்கள்

கோடைகாலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில், குளு குளு ஏ.சி. மாடல்கள் பார்ப்பதற்காக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் ஏ.சி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு கோடைகால சிறப்பு தள்ளுபடியில் ஏ.சி.க்களை விற்பனை செய்கின்றன. அதேபோல், பிரிட்ஜ் வகைகளுக்கும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏராளமான வண்ணங்களில் பிரிட்ஜூகள் இருக்கின்றன. சாம்சங் நி றுவனத்தின் புதிய வரவான ‘ஆர்.யூ. சீரியஸ் கியூ எல்.இ.டி.’ 43 அங்குலம் டி.வி. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தள்ளுபடி, சலுகைகள்...

இதுகுறித்து சத்யா நிறுவனத்தின் ஜாக்சன் கூறுகையில், ‘தினத்தந்தியுடன் சத்யா நிறுவனம் தொடர்ந்து கண்காட்சியை நடத்தி வருகிறது. நல்ல வரவேற்பு இருக்கிறது. கோடைகாலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு தள்ளுபடிகளும், சலுகைகளும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணங்களை சத்யா நிறுவனம் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு அனைத்து மாடல்களும் இருக்கின்றன’ என்றார்.

கண்காட்சியில் சத்யா நிறுவனத்தின் சார்பில் செல்போன்களும் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், எந்த செல்போன் வாங்கினாலும் சிறப்பு பரிசு உண்டு என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பர்னிச்சர் வகைகள்

எலக்ட்ரானிக்ஸ் பொருட் களை போன்றே பர்னிச்சர் வகைகளுக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் அதிரடி கோடைகால சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. அபி இம்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உயர்ரக பெட்ரூம் செட், லெதர் சோபா மற்றும் அனைத்து வீடு மற்றும் அலுவலக பர்னிச்சர்கள் பூஜ்ஜிய சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை தவணை முறையில் வழங்குகிறது.

விஸ்டா, மாருதி, பர்னிச்சர் பஜார், நிக்மேட், ஸ்பேஸ் கிராப்ட், சுப்ரீம், வெற்றி அப்ளையன்ஸ் போன்ற பர்னிச்சர் நிறுவனங்களும் ஏராளமான தள்ளுபடி மற்றும் சலுகைகளில் பர்னிச்சர் வகைகளை விற்பனை செய்கின்றன.

ஆச்சி மசாலா நிறுவனம் சார்பிலும் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பாதாம் டிரிங் மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ், ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகள், ஜாம், குலோப் ஜாமூன் ஆகிய தயாரிப்புகளுக்கு ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசமாக வழங்குகிறது. கண்காட்சியில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு ‘கிட்ஸ் கேம் கார்னிவலும்’ ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கோடைகால சிறப்பு தள்ளுபடிகள்

* குறிப்பிட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி தரப்படுவதுடன், பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் உண்டு.

* பைனான்ஸ் உதவியுடன் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி கூப்பன் மற்றும் 100 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

* ரூ.29 ஆயிரத்து 990 மதிப்பிலான டி.சி.எல். 32 அங்குலம் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ரூ.12 ஆயிரத்து 990 மட்டுமே.

* 185 லிட்டர் பிரிட்ஜ், ஸ்டெபிலைசர், 3 லிட்டர் பிரஷர் குக்கர், ஸ்டான்ட் அனைத்தும் சேர்த்து ரூ.13 ஆயிரத்து 990 மட்டுமே.

* வீனஸ் பெடஸ்டல் பேன் மற்றும் பஜாஜ் ஏர்கூலர் சேர்த்து ரூ.6 ஆயிரத்து 990 மட்டுமே.

* 55 அங்குலம் பானசோனிக் 4கே எல்.இ.டி. டி.வி.-க்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

* எந்த மாடல் பிரிட்ஜ் வாங்கினாலும் அதனுடன் பிரஷர் குக்கர் இலவசம்.

* வாடிக்கையாளர்கள் விரும்பும் எந்த மாடல் ஏ.சி.யையும் ரூ.1 மட்டும் செலுத்தி வீட்டுக்கு எடுத்துசெல்லும் சலுகை அளிக்கப்படுகிறது.

* பஜாஜ் பைனான்ஸ் மூலம் ஏ.சி. வாங்குபவர்கள் மின்சார கட்டணத்தில் ரூ.7 ஆயிரம் வரை சலுகை பெறலாம்.

* ரூ.29 ஆயிரத்து 990 மதிப்புள்ள டி.சி.எல். 40 அங்குலம் எச்.டி. எல்.இ.டி. டி.வி. ரூ.14 ஆயிரத்து 990 மட்டுமே. மேலும் 3 வருட வாரண்டியும் கிடைக்கும்.

Next Story