தானே ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
தானே ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவர் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
தானே,
கோவா மாநிலம் மட்காவில் இருந்து இயக்கப்படும் கொங்கன் கன்யா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பூஜா சவுகான் (வயது20) என்ற கர்ப்பிணியும் பயணம் செய்தார்.
ரெயில் தானே ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போது அதிகாலை 5.40 மணியளவில் திடீரென பூஜா சவுகானுக்கு பிரசவ வலி உண்டானது. இதுபற்றி சக பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு தெரியப்படுத்தினர்.
ஆண் குழந்தை பிறந்தது
இதையடுத்து ரெயில் தானே ரெயில் நிலையம் வந்ததும் உடனடியாக பூஜா சவுகான் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.
அப்போது பூஜா சவுகான் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாய், சேய் இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக தானே மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
Related Tags :
Next Story