ராகுல்காந்தி விளம்பர பதாகைகளில் திருடன் என எழுதியவர் கைது


ராகுல்காந்தி விளம்பர பதாகைகளில் திருடன் என எழுதியவர் கைது
x
தினத்தந்தி 28 April 2019 4:05 AM IST (Updated: 28 April 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் நிலை யங்களில் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட ராகுல்காந்தி விளம்பர பதாகைகளில் `திருடன்' என எழுதியவரை போலீ சார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் விளம்பர பதாகை வைக்கப் பட்டிருந்தது. அந்த விளம்பர பதாகையில் ராகுல் காந்தி இருக்கும் இடத்திற்கு அருகே திருடன் என எழுதப் பட்டிருந்தது.

மேலும் வெர்சோவா முதல் காட்கோபர் வரை உள்ள மெட்ரோ ரெயில் நிலை யங்களில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பதாகைகளிலும் திருடன் என எழுதப் பட்டிருந்தது.

இதை பார்த்த அந்தேரி மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள், மும்பை மெட்ரோ நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மும்பை மெட்ரோ நிர்வாகம் அந்தேரி போலீசில் புகார் கொடுத்தது.

பிடிபட்டார்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விளம்பர பதாகையில் திருடன் என எழுதியவரை கைது செய்தனர். இதில், அவரது பெயர் நிலேஷ் பாஜூலால் ராதோட்என்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என அழைத்தது அவருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த போது வெர்சோவா முதல் காட்கோபர் வரை உள்ள ரெயில் நிலையங்களில் காங்கிரஸ் விளம்பர பதாகைகள் வைக்கப் பட்டிருந் ததை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் அந்த விளம்பர பதாகைகளில் திருடன் என எழுதியது தெரியவந்தது.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட் டார்.

Next Story