துபாயில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி மும்பை தமிழ்ச்சிறுவன் 2 தங்கம் வென்று சாதனை
துபாயில் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் மும்பை தமிழ்ச்சிறுவன் 2 தங்கம் வென்று சாதனை படைத்தான்.
மும்பை,
சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் ‘தி புடோக்கன் கப்-2019' கோப்பைக்கான கராத்தே போட்டிகள் துபாயில் நடந்தன. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, பிலிப்பைன்ஸ், ஓமன், குவைத், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, பூடான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த 400-க்கும் அதிகமான கராத்தே மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மும்பை சாந்திவிலியை சேர்ந்த அட்லின் அருள் என்பவரின் மகன் ஆர்யன் என்ற சிறுவன் கலந்து கொண்டான். பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்ற சிறுவன் ஆர்யன் இறுதி போட்டியிலும் அசத்தி 2 தங்கப்பதக்கங்களை வென்றான்.
இதன் மூலம் அவன் அடுத்த மாதம் (மே) ஜப்பானில் நடக்கும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளான். 2 தங்கப்பதக்கங்களை வென்ற சிறுவன் ஆர்யனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Related Tags :
Next Story