வேப்பந்தட்டை பகுதியில் வறட்சியால் காய்ந்த மரங்களுக்கு இழப்பீடு விவசாயிகள் கோரிக்கை
வேப்பந்தட்டை பகுதியில் வறட்சியால் காய்ந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இதில் பல விவசாயிகள் தென்னை, சவுக்கு, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை நீண்டகால பயிராக பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் மழையின் அளவு வெகுவாக குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. தற்போது கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்நிலையில் பலரது விவசாயக் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது.
இதனால் மரங்களை வளர்க்கும் விவசாயிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் பல வருடங்களாக வளர்த்து வந்த மரங்கள் வறட்சியினால் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில விவசாயிகள் லாரி மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வருகின்றனர். எனவே தமிழக அரசு காய்ந்துபோன மர வகைகளை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story