இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவம்: சிவகங்கை, காரைக்குடியில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி


இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவம்: சிவகங்கை, காரைக்குடியில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காரைக்குடி, சிவகங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டிசிறப்பு திருப்பலி நடைபெற்றது.

காரைக்குடி,

இலங்கையில் கடந்த வாரம் ஈஸ்டர் திருநாளில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காரைக்குடி செக்காலையில் அமைந்துள்ள தூயசகாய அன்னை தேவாலாயத்தில் பங்கு தந்தைகள் எட்வின் ராயன், ஒனாசியஸ் பிரபாகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தேவலாயத்தை சுற்றி வந்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் 500–க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்பு தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதேபோல சிவகங்கையில் உள்ள அலங்கார அன்னை பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலிக்கு பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் கையில் மெழுகுவர்த்தியுடன் பேராலாயத்திலிருந்து ஊர்வலமாக வந்து அலங்கார அன்னை கெவினில் விளக்கு ஏற்றினர். அதன்பின்பு கருப்பு கொடி அணிந்து துக்கம் கடைபிடித்தனர்.

இதில் சிவகங்கை அலங்கார அன்னை பேராலாயத்தின் துணைத் தலைவர் அருள்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story