நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகள் குறைந்த தீமை, நிறைந்த நன்மை செய்யக் கூடியவையாக இருக்க வேண்டும் நீதிபதி பேச்சு
நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகள் குறைந்த தீமை, நிறைந்த நன்மை செய்யக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் பேசினார்.
திருச்சி,
ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் எழுதிய மனிதநேய தீர்ப்புகள் என்ற புத்தகத்தின் 7-வது பதிப்பு வெளியீட்டு விழா அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் நேற்று திருச்சியில் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் புத்தகத்தை வெளியிட ஐகோர்ட்டு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் நீதிபதி எம்.கற்பக விநாயகம் ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கலாம் என ஒரு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே யாரும் யாருடனும் சேர்ந்து வாழலாம் என்ற தீர்ப்பு என் நெஞ்சில் வேதனையை ஏற்படுத்தியது. இந்திய நாட்டின் கலாசாரம், பண்பாடு தனி மனித ஒழுக்கத்தின் அடிப்படையிலானது. தனி மனித ஒழுக்கம் இல்லாதவன் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவனாகி விடுகிறான். கடவுள் நம்பிக்கை இருந்தால் தான் ஒழுக்கம் நன்றாக இருக்கும்.
அடிப்படை ஒழுக்கம், நாணயம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? மனிதன் தவறுகளை திருத்திக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளவேண்டும். மனிதனின் அழகே ஒழுக்கத்தில் தான் இருக்கிறது. எனவே நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். மனம் ஒழுங்குபடுத்தப்படும்போது அது தெய்வீகமாகிறது. ஒருவர் அமைச்சர், முதல்வர், பிரதமர், நீதிபதி என எந்த ஒரு உயர்ந்த பதவியிலும் இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வீணாகிறது. நாம் சாதிக்க பிறந்தோம் என நினைக்க வேண்டும். சம்பாதிப்பதற்காக அல்ல. குருபக்தி, தன்னம்பிக்கை, உழைப்பு, ஒழுக்கம், ஊக்கம், நேர்மை, மனித நேயம் ஆகிய இந்த ஏழுதான் என்னை வாழ்க்கையில் வெற்றி அடைய வைத்து இருக்கிறது.
நீதிபதிகள் சட்டத்தை மட்டும் படித்தால் போதாது. நமது நாட்டின் வரலாறு, தலைவர்களின் வரலாறு, கலை, கலாசாரத்தையும் படிக்க வேண்டும். பகவத் கீதை, பைபிள், குரான், திருக்குறளில் எவ்வளவோ தத்துவங்கள் இருக்கின்றன. நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கும் முன் எது குறைவான தீமை, நிறைந்த நன்மை செய்யக்கூடியவை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில தலைவர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் தாமஸ், மண்டல அமைப்பாளர் ஆர்.கே.ராஜா, சமூக ஆர்வலர் சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் வழக்கறிஞர் மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story