சேலம் அம்மாபேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கட்டிட தொழிலாளிக்கு வலைவீச்சு
சேலம் அம்மாபேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 36). கட்டிட தொழிலாளி.
அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்லப்பன் அந்த சிறுமியிடம் நைசாக பேசியுள்ளார். அப்போது சிறுமி தனக்கு தாகம் எடுப்பதாகவும், தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாள்.
இதையடுத்து செல்லப்பன் சிறுமியிடம் உனக்கு எனது வீட்டில் உள்ள குளிர்பதன பெட்டியில் இருக்கும் குளிர்ந்த நீர் தருகிறேன் எனக்கூறி அழைத்து சென்றார். அப்போது செல்லப்பன் வீட்டில் யாரும் இல்லை. இதை பயன்படுத்தி செல்லப்பன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனக்கூறி சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதன்பின்னர் நேற்று முன்தினம் சிறுமி அழுது கொண்டு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி செல்லப்பனை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story