தஞ்சை புயல் காரணமாக விற்பனைக்கு குவிந்த வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி; விற்பனையும் மந்தம்
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் புயல் காரணமாக விற்பனைக்கு வாழைத்தார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் விற்பனையும் மந்தமாக காணப் படுகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கண்டியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, விளாங்குடி பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கண்டியூரில் உள்ள வாழை மார்க்கெட்டிற்கும், தஞ்சையில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழை மண்டிக்கும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதே போல் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, தேனி, சின்னமனூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் தூத்துக்குடியில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு வரவழைக்கப்படும். மற்ற ஊர்களின் வாழைத்தார் களை விட தூத்துக்குடி வாழைததாருக்கு மவுசு அதிகம் ஆகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழைத்தார் விலை அதிக அளவில் காணப்பட்டது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் ஒரு வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2 தினங்களாக வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.700-க்கு விற்ற வாழைத்தார் ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சி அடைந்தாலும் விற்பனை மந்தமாக காணப்பட் டது.
கடந்த 2 தினங்களாக தஞ்சை மார்கெட்டிற்கு விவசாயிகள் அதிக அளவில் வாழைத்தார்களை வெட்டி எடுத்து வந்தனர். இதனால் வாழைத்தார்கள் வந்து குவிந்தன. வாழைத்தார்கள் குவிவதாலும், விற்பனை இல்லாததாலும், வியாபாரிகள் மேலும் கொள்முதல் செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து தஞ்சை காமராஜர் மார்க்கெட் மொத்த வாழை வியாபாரி வி.எஸ்.பாலு கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இந்த நிலையில் வங்கக்கடலில் பானி புயல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக வாழை விவசாயிகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாழைத்தார்களை அதிக அளவில் விற்பனைக்கு வெட்டி எடுத்து வருகிறார்கள். இதனால் வாழைத்தார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
விலை வீழ்ச்சி அடைந்தாலும், விற்பனையும் அதிக அளவில் இல்லாமல் மந்தமாகவே காணப்படுகின்றன. செவ்வாழை, ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைத்தார்களின் விலையும் குறைந்து காணப்படுகின்றன. விற்பனையும் மந்தமாக உள்ளதால் மேலும் வாழைத்தார் கொள்முதல் செய்யாமல் உள்ளோம்”என்றார்.

Related Tags :
Next Story