கோடியக்காடு சரணாலயத்தில் தோட்டாக்களுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது
கோடியக்காடு சரணாலயத்தில் தோட்டாக்களுடன் பதுங்கி இருந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். துப்பாக்கியுடன் தப்பி ஓடியவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காடு கிராமம் உள்ளது. வங்கக்கடலை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் பசுமை மாறா காடு உள்ளது.
வனவிலங்குகள் சரணாலயமாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த காட்டில் மான், காட்டுப்பன்றி, முயல், நரி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளும், ஏராளமான அரிய வகை பறவைகளும் வசித்து வருகின்றன.
சரணாலயத்தில் மான்கள் உள்ளிட்ட விலங்குகளும், பறவைகளும் வேட்டை யாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக வனத்துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள்.
சரணாலயத்துக்குள் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்று வேட்டை தடுப்பு பணியில் ஈடுபடுவதும் வழக்கம். நேற்று அதிகாலை கோடியக்கரை வனச்சரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வன காவலர்கள் கோடியக்காடு நண்டுபள்ளம் சரணாலய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு 2 பேர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதில் ஒருவரிடம் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட நபரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வேதாரண்யம் பண்ணிநேர்மொழியாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மீனாட்சிசுந்தரம் (வயது32) என்பதும், அவர் தோட்டாக் களுடன் அங்கு பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவரும், தப்பி ஓடிய வரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரத்தை கைது செய்து, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தப்பி ஓடிய நபரை வனத் துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story