கரூர் அருகே மதுவுக்கு அடிமையானவர் தூக்குபோட்டு தற்கொலை
கரூர் அருகே மதுவுக்கு அடிமையானவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,
கரூர் அருகேயுள்ள வாங்கல் குப்புச்சிபாளையம் கவுண்டர்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். மதுப்பழக்கத்தை விடுமாறு குடும்பத்தினர் எவ்வளவோ கேட்டு கொண்ட போதும், அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜாவின் மனைவி கூலிவேலைக்காக வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் குடிபோதையில் இருந்த ராஜா, திடீரென மன உளைச்சலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த, வாங்கல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையறிந்ததும் அங்கு வந்த, ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இறந்த போன ராஜாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.