இலங்கை குண்டுவெடிப்பு: நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


இலங்கை குண்டுவெடிப்பு: நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் குண்டுவெடிப்பு எதிரொலியாக நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நெல்லை, 

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. தேவாலயங்கள், ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் பலியானார்கள். மேலும் தொடர்ந்து அவ்வப்போது அங்கு குண்டுகள் வெடித்து வருகின்றன. இதே போல் தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நெல்லையில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் வழக்கமான பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவ மக்கள் அந்தந்த பகுதி தேவாலயங்களில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்வார்கள். எனவே தேவாலயங்களில் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயம், தெற்கு பஜார் சவேரியார் பேராலயம், சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் முக்கியமான தேவாலயங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story