தேன்கனிக்கோட்டை அருகே கடத்தப்பட்ட மாணவன் மீட்பு


தேன்கனிக்கோட்டை அருகே கடத்தப்பட்ட மாணவன் மீட்பு
x
தினத்தந்தி 30 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கடத்தப்பட்ட மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூர் கொல்லை சித்திக் நகரை சேர்ந்தவர் கட்டிகான். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 4-வது மகன் மாதேஷ் (வயது 12). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மாதேஷ் திடீரென காணாமல் போனான்.

இது குறித்து கட்டிகான், அதேபகுதியை சேர்ந்த மாதையனிடம் கேட்டபோது அவரை சிலர் தாக்கி உள்ளனர். அப்போது தான் அவரது மகனை சிலர் கடத்தி சென்றது தெரியவந்தது. மகன் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து கட்டிகான் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில் ஒரு கும்பல் பணத்திற்காக மாணவன் மாதேசை கடத்தி கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை தோட்டத்தில் விற்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் யஸ்வந்த்பூருக்கு சென்று அங்கு கொத்தடிமையாக விற்கப்பட்ட மாணவன் மாதேசை மீட்டு தேன்கனிக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story