மணலி சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் பீகார் மாணவி சாதனை


மணலி சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் பீகார் மாணவி சாதனை
x
தினத்தந்தி 30 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 83 மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

திருவொற்றியூர்,

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 83 மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 50 சதவீத மாணவிகள் 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவிகள் மாசூம் குமாரி, ரீட்டா, ரேஷ்மா ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சந்திரமோகன், தலைமையாசிரியை ஜெகஜோதி, பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவர்களில் மொத்தம் 459 மதிப்பெண்களை பெற்றுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி மாசூம் குமாரி, தமிழில் 95 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

Next Story