திருக்காட்டுப்பள்ளியில் 2 அடி உயர மாணவி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி உதவித்தொகை வழங்க தாயார் கோரிக்கை


திருக்காட்டுப்பள்ளியில் 2 அடி உயர மாணவி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி உதவித்தொகை வழங்க தாயார் கோரிக்கை
x
தினத்தந்தி 30 April 2019 4:15 AM IST (Updated: 30 April 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 2 அடி உயர மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமாநேரி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால்-வின்சி ஆகியோரின் மகள் சுவேதா. இவர் 2 அடி உயரமே உள்ளார். அலமேலுபுரம் பூண்டி அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் மாணவி சுவேதா எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வை எழுதி இருந்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நேற்று வெளியான தேர்வு முடிவில் மாணவி சுவேதா, 500-க்கு 297 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் வினோலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து மாணவி சுவேதா கூறுகையில், பழமாநேரி ஆர்.சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்தேன். அலமேலுபுரம் பூண்டி உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தேன். சக மாணவிகள், ஆசிரியர்கள் என்னிடம் வேறுபாடு காட்டாமல் பழகினர் என்றார்.

சுவேதாவின் தாயார் வின்சி கூறுகையில், எனது மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார்.

தன்னிடம் உள்ள குறைபாட்டை நினைத்து கவலைப்படாமல் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை கிராம மக்கள் பாராட்டினர்.

Next Story