கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் விடையாற்றி உற்சவம்: புஷ்ப பல்லக்குகளில் 3 பெருமாள் வீதியுலா
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி புஷ்ப பல்லக்குகளில் 3 பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த திருத்தலமாக போற்றப்படும் இக்கோவில், பெருமாள் வீற்றிருக்கும் பஞ்ச ரங்க கோவில்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு என 2 வேளை பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி ஆகிய 3 பெருமாள்களும் 3 புஷ்ப பல்லக்குகளில் தனித்தனியாக எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 3 பெருமாள்களையும் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story