அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் பேர் தேர்ச்சி


அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 30 April 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர்,

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 174 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 082 மாணவர்களும், 5 ஆயிரத்து 372 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 454 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 872 மாணவர்களும், 5 ஆயிரத்து 238 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.71 சதவீதம் ஆகும்.

செல்போன் மூலம்...

மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் செல்போன் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு வந்தது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. சிலர் பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை பார்த்து சென்றனர்.

Next Story