ஈரோட்டில் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு


ஈரோட்டில் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 30 April 2019 4:15 AM IST (Updated: 30 April 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி நஞ்சனாபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் ஹரிபிரசாந்த் (வயது 17). இவர் 6–ம் வகுப்பு வரை படித்து இருந்தார். அதன்பின்னர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றார்.

ஹரிபிரசாந்த் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இதை மணியும், அவருடைய மனைவியும் கண்டித்தனர். ஆனால் மது அருந்தும் பழக்கத்தை அவரால் கைவிட முடியவில்லை.

இந்த நிலையில் மது பழக்கத்தை விட முடியாததாலும், பெற்றோர் கண்டித்ததாலும் ஹரிபிரசாந்த் மனவேதனை அடைந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார். கடந்த 24–ந் தேதி ஹரிபிரசாந்த் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். பின்னர் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஹரிபிரசாந்த் இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story